ADDED : ஜூலை 16, 2024 11:59 PM
சிவகங்கை : சிவகங்கை நகர் போலீசார் புதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இலுப்பக்குடி லட்சுமணன் 20. காஞ்சிரங்கால் கதிரேசன் 20. இருவரும் சந்தேகப் படும்படியாக நின்றனர்.
இருவரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 400 கிராம் கஞ்சா இருந்ததை அறிந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.