/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குரூப் 2 எழுத்து தேர்வு 8749 பேர் பங்கேற்பு குரூப் 2 எழுத்து தேர்வு 8749 பேர் பங்கேற்பு
குரூப் 2 எழுத்து தேர்வு 8749 பேர் பங்கேற்பு
குரூப் 2 எழுத்து தேர்வு 8749 பேர் பங்கேற்பு
குரூப் 2 எழுத்து தேர்வு 8749 பேர் பங்கேற்பு
ADDED : செப் 26, 2025 01:59 AM
சிவகங்கை: செப்., 28 ல் நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதற்கட்ட தேர்வை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டையில் 30 தேர்வு மையங்களில் 8,749 பேர் எழுத உள்ளனர்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள குரூப் 2 அதிகாரிகளை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வினை அறிவித்தது. பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதற்கட்ட தேர்வு செப்., 28 ல் காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது. தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு அறைக்குள் வந்து விட வேண்டும்.
சிவகங்கை 16, தேகோட்டை 4, காரைக்குடி 10 தேர்வு மையங்கள் என மாவட்ட அளவில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வில் பொது அறிவு 100 வினா, பொது தமிழில் 100 வினா என 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.