ADDED : பிப் 29, 2024 11:39 PM
சிவகங்கை, -சிவகங்கை எம்.எல்.ஏ., தொகுதிக்குட்பட்ட பழமலை நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 48 காலனி நகராட்சி நடுநிலை பள்ளி, சுந்தரநடப்பு ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட 20 பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செல்வமணி, நகர் செயலாளர் ராஜா, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சதீஸ்பாலு கலந்துகொண்டனர்.


