ADDED : மே 25, 2025 11:11 PM

தேவகோட்டை: ஆண்டாவூரணி சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் 1993--95 ஆண்டுகளில் பிளஸ் 1,2 படித்த மாணவ மாணவியர் 50 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேவகோட்டையில் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தற்போது அவரவர் செய்யும் பணிகள்,குடும்பங்கள் குறித்து பரிமாறி மகிழ்ந்தனர். அருள்தாஸ் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற உள்ள ஆசிரியர் ஜேம்ஸ் ரோச் சேகரை பாராட்டி மகிழ்ந்தனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாட்டை சண்முகம் செய்திருந்தார்.