/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
ADDED : ஜன 04, 2024 02:20 AM
திருப்புவனம்; திருப்புவனம் அருகே அல்லிநகரம் அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்களை தலைமையாசிரியை லதாவிடம் வழங்கினர்.
அல்லிநகரம் அரசுப்பள்ளியில் பயின்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாணவர்கள் இணைந்து நம்ம ஊர் பள்ளிக்கூடம் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி முதல் கட்டமாக 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர், மைக் உள்ளிட்ட உபகரணங்களை பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.


