ADDED : ஜூன் 19, 2025 02:45 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜபாண்டியனுக்கு பாராட்டு விழா நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் க. ரவி தலைமை வகித்து பேசினார். முதல்வர் ரமேஷ் வரவேற்றார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன் வாழ்த்தினார். முதுகலை ஆசிரியர் உமா பெரியநாயகி நன்றி கூறினார்.


