Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இளையான்குடி அரசு மருத்துவமனையை மாற்ற ..: பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் வாக்குவாதம்

இளையான்குடி அரசு மருத்துவமனையை மாற்ற ..: பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் வாக்குவாதம்

இளையான்குடி அரசு மருத்துவமனையை மாற்ற ..: பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் வாக்குவாதம்

இளையான்குடி அரசு மருத்துவமனையை மாற்ற ..: பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் வாக்குவாதம்

ADDED : அக் 14, 2025 03:58 AM


Google News
Latest Tamil News
கவுன்சில் கூட்டத்திற்கு தலைவர் நஜூ முதீன் தலைமை வகித்தார்.துணை தலைவர் இப் ராஹிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அன்னலட்சுமி வரவேற்றார்.

கூட்டத்தில் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14ல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே குறுகிய இடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதால் அங்கு பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நவீன மருத்துவம், மருத்துவ கருவிகள் அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லா மலும், கட்டடங்கள் மிகவும் சேதமடைந்துள்ளதாலும் சிவகங்கை ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சர்வே நம்பர் 193ல்போதுமான இட வசதியுடன் அமைப்பதற்கு தீர்மானம் வாசித்தனர்.

அப்போது தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவரும், கவுன் சிலருமான செய்யது ஜமீமா, அ.தி.மு.க., கவுன்சிலர் நாகூர் மீரா, காங்., கவுன் சிலர் அல்அமீன் ஆகியோர் தற்போது செயல்பட்டு வரும் இடத்திலேயே போதிய இடவசதி உள்ளது.

ஆகவே புதிய மருத்துவமனையை இங்கேயே விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்போது இங்கு 84 சென்ட் இட வசதி உள்ள நிலையில் 3 அடுக்குடன் அனைத்து வசதிகளுடனும் மருத்துவமனை கட்டலாம் என ஏற்கனவே ஆய்வு செய்து உள்ளனர்.

இங்கிருந்து மருத்துவ மனையை வெகு தூரம் உள்ள சிவகங்கை ரோட்டிற்கு மாற்றினால் நகர மற்றும் கிராம பகுதி களை சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் நிலை உள்ளது.

மருத்துவ பயனாளிகள் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் புதிய மருத்துவமனை பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப் பட்டாலும் இங்குள்ள மருத்துவமனை செயல்படும் என தெரிவிக்கின்ற நிலையில் ஏற்கனவே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை உள்ள நிலையில், இரண்டு இடங்களில் மருத்துவமனை செயல்படும் பட்சத்தில் டாக்டர், நர்சுகளை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவே மருத்துவ பயனாளிகள் நலன் கருதி, பழைய இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணை தலைவர் இப்ராஹிம், காங்., கவுன்சிலர் ஷேக், சுயே., கவுன்சிலர்கள் ராஜவேலு, ஜலாலுதீன் ஆகியோர் தற்போதுள்ள அரசு மருத்துவமனை போதிய இடவசதியின்றி செயல் படுகிறது.

இங்கு பிரேத பரி சோதனை கூட செய்ய முடியாத நிலை உள்ளது. இரவில் டாக்டர், நர்சுகள் தங்கி பணிபுரிய போதிய குடியிருப்புகள் மற்றும் வசதிகள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில் நோய்களின் தன்மையை பொறுத்து அதற்கு தகுந்தார் போல் நவீன மருத்துவம் செய்வதற்குஉரிய எவ்வித வசதியும் இல்லாத காரணத்தினால் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்திற்கு அரசு மருத்துவமனையை மாற்றி னால் அங்கு அனைத்து நவீன வசதிகளுடனும் சிகிச்சை பெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளதோடு பழைய மருத்துவமனை யிலும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us