ADDED : ஜன 05, 2024 04:58 AM
தேவகோட்டை, : தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பஸ் ஸ்டாப்பில் இருந்து திருவேகம்பத்துார் வரை புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
திட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் 65. வேடிக்கை பார்க்க வந்திருந்தார்.
பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மாட்டு வண்டி ஒன்று ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் ஆறுமுகம் தடுமாறி கீழே விழுந்தார்.
காயமடைந்த ஆறுமுகம் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் வண்டி ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


