/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : பிப் 25, 2024 06:22 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலையில் அலங்கரித்து வைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர் செயலாளர் ராஜா, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், செல்வமணி, கோபி, அருள் ஸ்டீபன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
*தேவகோட்டையில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தனது அலுவலகம் முன்பு ஜெ.படத்திற்கு மாலை அணிவித்தார். பல இடங்களில் அலங்கரிக்கப்பட்ட ஜெ. படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நகர செயலாளர் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், கவுன்சிலர் அய்யப்பன், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் கார்த்தி, இலக்கிய அணி முத்துராமலிங்கம், வட்ட செயலாளர் சிங்கமுகம், துரைராஜ், ஆசிரியர் சுப்பிரமணியன், உட்பட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
சருகணி விலக்கில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மா. இளைஞர் அணி துணை செயலாளர் கண்டதேவி முருகன்,
நிர்வாகிகள் நடராஜன், ஜோசப், உட்பட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் சார்பில் தேவகோட்டை சன்மார்க்க சங்கம், முப்பையூர் சாய்பாபா கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.
தேவகோட்டை நகர அ.ம.மு.க. சார்பில் ஜெ. பிறந்த நாள் விழா பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடந்தது.
நகர செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ஜெ. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு பாலாஜி, வட்ட செயலாளர்கள் பெரிய கருப்பன், மகேஷ், நல்லுபாண்டி, உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.