Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பா.ஜ., தலைவர் நாளை காரைக்குடி வருகை

பா.ஜ., தலைவர் நாளை காரைக்குடி வருகை

பா.ஜ., தலைவர் நாளை காரைக்குடி வருகை

பா.ஜ., தலைவர் நாளை காரைக்குடி வருகை

ADDED : அக் 12, 2025 04:37 AM


Google News
காரைக்குடி : பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பா.ஜ., சார்பில், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் காரைக்குடியில் நடைபெறுகிறது. இதில், பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். மதுரையிலிருந்து புறப்பட்டு நாளை மதியம் 2:00 மணிக்கு பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் செய்கிறார். மதியம் 3:00 மணிக்கு காரைக்குடி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியுடன் பிரசாரம் தொடங்குகிறது. மாலை 5:00 மணிக்கு காரைக்குடி நெசவாளர் காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us