ADDED : அக் 05, 2025 04:34 AM
மானாமதுரை மானாமதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமை தலைமை மருத்துவ அலுவலர் பூர்ண சந்திரன் துவக்கி வைத்தார். ஆய்வக நுட்பனர் முத்துமீனா வரவேற்றார்.
முகாமில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.


