ADDED : ஜூன் 20, 2025 12:22 AM
காரைக்குடி: காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் 23 வது ஆண்டு புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது.
விழாவில், குழு தலைவர் சுவாமி வரவேற்கிறார். செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் வெங்கடாசலம் அறிமுகம் செய்கின்றனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், மாங்குடி எம்.எல்.ஏ., மேயர் முத்துத்துரை, காட்டு தலைவாசல் பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது பக்ருதீன் யூஸுபி, பாதிரியார் கிளமென்ட் ராசா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஜூன் 20 முதல் 29 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. சனி, ஞாயிறு காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும். மற்ற நாட்களில் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.
தினமும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி, கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.