Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் ஆய்வு

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் ஆய்வு

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் ஆய்வு

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் ஆய்வு

ADDED : அக் 04, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
கீழடி:ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மதுரை திரும்பும்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது.

அகழாய்வு நடந்த இடமான நான்கரை ஏக்கரில் 914 சதுர மீட்டரில் 17 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடந்து வருகின்றன.

அகழாய்வில் கண்டறியப்பட்ட இரட்டை சுவர், மண் பானைகள், உலைகலன்கள், சுருள்வடிவ குழாய் உள்ளிட்டவைகள் வெளியே காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

நேற்று மதியம் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடக்கும் இடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். பணிகள் குறித்து கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர்.

முன்னதாக கீழடி தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us