Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடியில் திட்டமிடலின்றி நடக்கும் பணி அரசின் வரிப்பணம் வீணாவதாக புகார்

கீழடியில் திட்டமிடலின்றி நடக்கும் பணி அரசின் வரிப்பணம் வீணாவதாக புகார்

கீழடியில் திட்டமிடலின்றி நடக்கும் பணி அரசின் வரிப்பணம் வீணாவதாக புகார்

கீழடியில் திட்டமிடலின்றி நடக்கும் பணி அரசின் வரிப்பணம் வீணாவதாக புகார்

ADDED : மே 25, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
கீழடி: தமிழக தொல்லியல் துறை உரிய திட்டமிடல் இன்றி கீழடியில் பணிகள் மேற்கொள்வதால் அரசின் வரிப்பணம் வீணாகி வருகிறது.

தமிழக தொல்லியல் துறை கீழடி, அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வை நடத்தியது. இதில் கொந்தகை, அகரம், கீழடியில் உள்ள அகழாய்வு தளங்களை பொதுமக்கள் காணும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவித்து மூன்று இடங்களிலும் தலா ரூ.10 முதல் 25 லட்சம் வரை செலவு செய்து கூடாரம் அமைத்துள்ளது. கீழடி தவிர்த்து மற்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லவில்லை.

இதனால் கூடாரம் அமைத்தும் பயனின்றி ஆடு, மாடுகள் அடைக்கும் கூடாரமாக மாறி வருகின்றன. அகழாய்வு குழிகள் சேதமடைந்து வருகின்றன. அகரத்தில் அகழாய்வு குழிகளை அவசரம் அவசரமாக மூடிவிட்டனர். கொந்தகை தளத்திற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அதுவும் பயனற்று போனது. கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றி இருந்தனர். இங்கு மட்டும்தான் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நான்கு, ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படுவதால் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் போடப்பட்ட கூடாரத்தை அகற்றிவிட்டனர். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகியது தான் மிச்சம். வரும் காலங்களிலாவது தொல்லியல் துறை உரிய திட்டமிடலுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us