ADDED : ஜூன் 20, 2025 12:16 AM

திருப்புத்துார்:திருப்புத்துாரிலிருந்து கண்டராமணிக்கம் செல்லும் ரோட்டோரத்தில் பல இடங்களில் மண் சரிவால் ரோடு சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்பு தார் ரோடு போடப்பட்ட பின் ரோட்டோரங்களில் கிராவல் மண் போடப்பட்டு உறுதி செய்யப்படும். தற்போது கிராவல் மண் தட்டுப்பாடால் இந்த முறை சிறிது,சிறிதாக கை விடப்படுகிறது.
ரோடு போடும் இடங்களில் உள்ள பாசனக் கால்வாய்களில் உள்ள களிமண் கலந்த மண்ணை அள்ளி ரோட்டோரம் போட்டு விடுகின்றனர்.
நெகிழ்வான இந்த மண் வாகன ஒட்ட அதிர்விலும், மழையிலும் அரிக்கப்பட்டு மீண்டும் கால்வாய்களுக்கு சரிந்து விடுகிறது.
இதனால் வாகனங்கள் ரோட்டோரங்களில் செல்லும் போது ரோடு சேதமடையும் வாய்ப்பும், வாகனங்கள் கவிழும் வாய்ப்பு உருவாகிறது.
திருப்புத்துாரிலிருந்து கண்டரமாணிக்கம் செல்லும் ரோட்டில் பல இடங்களில் மண் சரிந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.


