/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அபாயம்...: சிங்கம்புணரி குப்பைக்கிடங்கு இடம் மாறுமா: நோய் பரவும் அபாயம்அபாயம்...: சிங்கம்புணரி குப்பைக்கிடங்கு இடம் மாறுமா: நோய் பரவும் அபாயம்
அபாயம்...: சிங்கம்புணரி குப்பைக்கிடங்கு இடம் மாறுமா: நோய் பரவும் அபாயம்
அபாயம்...: சிங்கம்புணரி குப்பைக்கிடங்கு இடம் மாறுமா: நோய் பரவும் அபாயம்
அபாயம்...: சிங்கம்புணரி குப்பைக்கிடங்கு இடம் மாறுமா: நோய் பரவும் அபாயம்
ADDED : செப் 20, 2025 03:58 AM

இப்பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து கையாள மேலுார் ரோட்டில் குப்பைக் கிடங்கு செயல்படுகிறது. இக்கிடங்கு 2004 ஆம் ஆண்டு அமைக்கப்படும் போது அப்பகுதி நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக தான் இருந்தது.
தற்போது நகர் பகுதி விரிவடைந்து குடியிருப்பு பெருகிவிட்ட நிலையில், குப்பைக் கிடங்கை சுற்றி வீடுகளும் பெருகி உள்ளது.
மேலும் நகரில் சேரும் குப்பை அளவும் அதிகரித்து விட்டதால் அவற்றை கையாள இக்கிடங்கு போதுமானதாக இல்லை. அங்கு குப்பை பிரித்து கையாளப்பட்டு உரமாக மாற்றப்பட்டாலும், அதற்கான இடம் போதுமானதாக இல்லை.
அங்கிருந்து பரவும் துர்நாற்றம் மருதங்குண்டு, தெற்குத்தெரு, கக்கன் நகர், முத்தையா காலனி, அம்பேத்கர் நகர், தெற்கு மேலத்தெரு உள்ளிட்ட பகுதி மக்களை பாதிக்கிறது.
மழைக் காலங்களில் அப்பகுதி மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு வசிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் கிடங்கில் இருந்து வெளியேறும் சாக்கடை நீரால் நோய் பரப்பும் புழுக்கள் கால்வாய் வழியாக பரவுகிறது.
இதனால் குப்பை கிடங்கை இடம் மாற்ற சில ஆண்டுகளாக தொடர் கோரிக்கை இருந்து வருகிறது.
நகருக்கு வெளியே மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு புறம்போக்கு நிலத்திலோ அல்லது பேரூராட்சி சார்பில் வேறு இடத்தில் குப்பை கிடங்கை அமைத்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், குப்பை முறையாக கையாளப்பட்டு உரங்களாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.