ADDED : பிப் 05, 2024 11:56 PM
இளையான்குடி : இளையான்குடி சாலையூரில் வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.என்.ஏ.எஸ்., பள்ளி தலைவர் முகமது ஆரிப் தலைமை வகித்தார்.
இளையான்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முகமது அபுபக்கர் உலவி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இப்ராஹிம் பைஜி துவக்கி வைத்தார். விஸ்டம் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி கல்வியாளர் சித்திக் ஆலோசனை வழங்கினார். பொருளாளர் முகமது இஸ்மாயில் தாவூதி நன்றி கூறினார். ஏற்பாட்டை இளையான்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செய்திருந்தனர்


