ADDED : ஜூன் 12, 2025 02:08 AM
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இம்முகாமிற்கு தலைமை மருத்துவர் அயன்ராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து முன்னிலை வகித்தார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண்தான பிரிவு மேலாளர் சரவணன் பேசினார். முகாமில் 20-க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களை தானம் செய்து உறுதிமொழி பத்திரம் வழங்கினர். முகாமில் முன்னாள் பேருராட்சித்தலைவர் சோமசுந்தரம், சரவணன் பங்கேற்றனர்.