/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை, இளையான்குடியில் சரிந்த மின் கம்பங்களால் ஆபத்து மானாமதுரை, இளையான்குடியில் சரிந்த மின் கம்பங்களால் ஆபத்து
மானாமதுரை, இளையான்குடியில் சரிந்த மின் கம்பங்களால் ஆபத்து
மானாமதுரை, இளையான்குடியில் சரிந்த மின் கம்பங்களால் ஆபத்து
மானாமதுரை, இளையான்குடியில் சரிந்த மின் கம்பங்களால் ஆபத்து
ADDED : மே 27, 2025 12:55 AM

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 39 ஊராட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மின் கம்பங்களில் பெரும்பாலான மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளது.
மின் கம்பிகளும் அறுந்து விழும் நிலையிலும் உள்ளது. கிராம பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும், அலைபேசிக்கு கூட சார்ஜ் ஏற்ற முடியாமலும், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பெரும்பச்சேரி பகுதியில் அங்கன்வாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ் என்பவரது 12 வயது மகன் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
கடந்த மாதம் இளையான்குடி, பரமக்குடி ரோட்டில் குமாரகுறிச்சி கிராமத்திற்கு அருகில் மின்கம்பி அறுந்து விழுந்தது.அந்த நேரம் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் யாரும் செல்லாதால் உயிர்பலி ஏற்படவில்லை. ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தில்பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கிராமப் பகுதி மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள், மின்மாற்றிகள் பழுதாவது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பதில்லை. மின்தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய நாள் கணக்கில் ஆவதால் அவதிப்பட்டு வருகிறோம், மேலும் தற்போது மழை காலம் துவங்கி காற்றும் பலமாக வீசுவதால் ஆபத்து அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
மின் வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் சேதமடைந்த மின் கம்பங்கள், கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை மாற்றுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இருப்பினும் தொடர்ந்து புகார்கள் வரும் இடங்களில் இருக்கின்ற ஊழியர்களை வைத்து மின்கம்பங்கள், கம்பிகள்,மின்மாற்றிகளை உடனடியாக சரி செய்து வருகிறோம் என்றனர்.