ADDED : மே 17, 2025 01:03 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் 52, விவசாயி.இவர் நேற்று காலை வீட்டிலிருந்து திருப்புத்துார் ரோட்டில் உள்ள தோட்டத்திற்கு டூவீலரில்சென்றார். அப்போது சிங்கம்புணரியில் இருந்து வந்த சரக்குவேன் டூவீலர் மீது மோதியது. இதில் சுந்தரம் பலியானார்.
வேன் டிரைவர் முருகேசன் பாண்டியனை சதுர்வேதமங்கலம் போலீசார் கைது செய்தனர்.