/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ போதிய விலை கிடைக்காததால் திரும்பி சென்ற விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் திரும்பி சென்ற விவசாயிகள்
போதிய விலை கிடைக்காததால் திரும்பி சென்ற விவசாயிகள்
போதிய விலை கிடைக்காததால் திரும்பி சென்ற விவசாயிகள்
போதிய விலை கிடைக்காததால் திரும்பி சென்ற விவசாயிகள்
ADDED : செப் 25, 2025 04:57 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் செவ்வாய் தோறும் காலை எட்டு மணி வரை ஆடு, கோழி சந்தை நடைபெறும். விவசாயிகள் கொண்டு வரும் ஆடு, கோழிகளை வாங்க வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வருவதால் அதனையொட்டி திருப்புவனம் சந்தை களை கட்டும்.
புரட்டாசி பிறந்ததால் கால்நடைகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. வழக்கமாக திருப்புவனம் சந்தையில் ஆயிரத்து 500 ஆடுகள் வரை விற்பனையாகும், நேற்றைய சந்தையில் 500க்கும் குறைவான ஆடுகள் விற்பனையாகின. பத்து கிலோ எடை கொண்ட வெள்ளாடு நேற்றைய சந்தையில் ஏழாயிரம் ரூபாய்க்கே விற்பனையானதால் கொண்டு வந்த ஆட்டு குட்டிகளை விவசாயிகள் திரும்ப கொண்டு சென்றனர்.
விவசாயிகள் கூறுகையில்: சம்பா பருவத்திற்காக நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளோம், விதை நெல், உழவு பணி , வரப்பு வெட்டுதல் உள்ளிட்டவற்றிற்கு பணம் தேவை என்பதால் ஆட்டுகுட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம், விலை குறைந்ததால் விற்பனை செய்யாமல் திரும்ப கொண்டு செல்கிறோம், இனி தீபாவளியை ஒட்டி தான் விலை அதிகரிக்கும், என்றனர்.