ADDED : ஜன 20, 2024 04:52 AM
சிவகங்கை,: முப்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜன., 27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என சிவகங்கையில் நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், அன்பரசு பிரபாகரன், ஜோசப் சேவியர், மாவட்ட நிதி காப்பாளர் சிங்கராயர் பங்கேற்றனர்.
அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும். 30 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன.,27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்துவது என தீர்மானித்தனர்.


