ADDED : அக் 14, 2025 04:06 AM
சிவகங்கை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நிலுவை யில்உள்ள 3 சதவீத அகவிலைப்படியை தீபாவளிக்குள் வழங்க கோரி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மகளிர் அமைப்பாளர் லதா, மாநில செயற்குழு கோபால், துணை தலைவர் பாண்டி, இணை செய லாளர் கலைச்செல்வம், ராஜாமுகமது, தணிக்கையாளர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றனர்.
திருப்புவனத்தில் மீனா, மானாமதுரையில் செய லாளர் ராஜேஸ்வரன், திருப்புத்துாரில் கிளை தலைவர் தவுபிக் அகமது, சிவகங்கையில் கிளை தலைவர் முத்தையா, சாக்கோட்டையில் சிவா, ரீகன், சிங்கம்புணரியில் சேக் அப்துல்லா, இளையான்குடியில் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


