ADDED : செப் 20, 2025 04:01 AM
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் சங்கர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
பள்ளி கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி பேசினார். விழாவில் தாத்தா பாட்டிகள் மற்றும் குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாக இயக்குனர் சங்கீதா மற்றும் மங்கையர்கரசி பரிசு வழங்கினர். துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.