/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தி.மு.க., நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் மீது குண்டாஸ் தி.மு.க., நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
தி.மு.க., நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
தி.மு.க., நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
தி.மு.க., நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
ADDED : ஜூன் 12, 2025 02:00 AM
சிவகங்கை: சிவகங்கை தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை அருகே சாமியார்பட்டி தி.மு.க., விளையாட்டு அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார் 27. ஏப்ரலில் இவர் தனது பண்ணையில் இருந்த போது, மர்ம நபர்கள் வெட்டி அவரை கொலை செய்தனர். இந்த வழக்கில் சிவகங்கை போலீசார் சாமியார்பட்டி கருப்பையா மகன் கருணாகரன் 21, சிவகங்கை காளவாசல் செல்வராஜ் மகன் பிரபாகரன் 19, திருப்புத்துார் அருகே ரணசிங்கபுரம் சூரியமூர்த்தி மகன் குரு 21, ஆகிய 3 பேர்களை கைது செய்திருந்தனர்.
இவர்கள் 3 பேர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். சிறையில் உள்ள அவர்கள் மூன்று பேருக்கும் இதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.