/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்படும் பஸ்களால் கடும் நெரிசல் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்படும் பஸ்களால் கடும் நெரிசல்
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்படும் பஸ்களால் கடும் நெரிசல்
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்படும் பஸ்களால் கடும் நெரிசல்
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்படும் பஸ்களால் கடும் நெரிசல்
ADDED : செப் 19, 2025 02:11 AM
தேவகோட்டை:தேவகோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் இருபுறமும் பஸ்கள் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது.
தேவகோட்டை பஸ்டாண்டில் இட நெருக்கடி காரணமாக ரூ. 12 கோடியில் விரிவாக்கம் செய்ய அனுமதியாகி உள்ளது. தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ராம்நகர் பகுதியில் செப்.,8 முதல் செயல்பட்டு வருகிறது. தேவகோட்டையிலிருந்து காரைக்குடி,மதுரை,திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இங்கிருந்து புறப்படுகின்றன.
தனியார் பஸ்கள் நகருக்குள் வந்து சிவன் கோயில் சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர். மேலும், தொண்டி,திருவாடானை ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறது.
இங்கு பஸ்கள் வந்து நீண்ட நேரம் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகளும் ரோட்டின் இருபுறமும் பஸ்சிற்காக காத்திருப்பதால் கூட்ட நெரிசலும் காணப்படுகிறது. அதிகாலையில் போலீசாரும் பணியில் இல்லாததால் போக்குவரத்து சிக்கலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கு மாற்றாக நகருக்குள் வரும் பஸ்கள் தியாகிகள் பூங்கா ஓரத்தில் மட்டும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறங்க அனுமதிக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி முடியும் வரை காலை முதல் மாலை வரை இங்கு போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மீறி பஸ்களை நீண்ட நேரம் நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.