Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

ADDED : அக் 15, 2025 12:45 AM


Google News
திருப்புவனம்; திருப்புவனம் ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்ய வந்தனர்.

தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே ஆதார் பதிவு, திருத்தம் செய்ய முடியும்.

ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய இரண்டு பணியாளர்கள் இருப்பது வழக்கம். திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால் பதிவு செய்ய தாமதமாகிறது.

100 நாள் திட்டத்தில் முறைகேடு அதிகளவில் நடப்பதால் இந்த திட்டத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆதாரில் கண்விழி , கைரேகை உள்ளிட்டவற்றை மீண்டும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய வந்ததால் சிரமம் ஏற்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில்: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார்.

சாதாரண நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது 100 நாள் திட்ட பணியாளர்களும் பதிவு செய்ய வருவதால் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பணியாளர்கள் நியமித்து ஆதார் பதிவு செய்ய வேண்டும், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us