/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரையில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துவக்க விழாமானாமதுரையில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துவக்க விழா
மானாமதுரையில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துவக்க விழா
மானாமதுரையில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துவக்க விழா
மானாமதுரையில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துவக்க விழா
ADDED : பிப் 25, 2024 06:33 AM

மானாமதுரை : மானாமதுரை நகராட்சியில் ரூ. 39 கோடி செலவில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கான துவக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மானாமதுரையில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதையடுத்து மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ., தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ரெங்கநாயகி, நகராட்சி பொறியாளர் சீமா, மானாமதுரை தாசில்தார் ராஜா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, நகராட்சி கவுன்சிலர்கள் வேல்முருகன், புருஷோத்தமன், சதீஷ்குமார், செல்வகுமார், அழகர்சாமி, மாரிக்கண்ணன், இந்துமதி, காளீஸ்வரி, சித்ரா, சண்முகப்பிரியா, கங்காதேவி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.