ADDED : பிப் 01, 2024 11:40 PM
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் தமிழ் மன்றத் தொடக்க விழா நடந்தது.
முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். இணைப்பேராசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். பேராசிரியர்கள் அழகுச்சாமி, கலைச்செல்வி, சந்தானலெட்சுமி பேசினர். பேராசிரியர் அப்துல் ரகீம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவத் தலைவர் அழகிமீனாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ் மன்ற மாணவ செயலாளர் தாரணி நன்றி கூறினார்.


