ADDED : அக் 11, 2025 04:14 AM
திருப்புவனம்: மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கண்மாய் மடைகள், வாய்க்கால் ஆகியவற்றை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் 40 ஹெக்டேருக்கும் குறைவாக 90 கண்மாய்களும்,40 ஹெக்டேருக்கும் அதிகமாக 105 கண்மாய்களும் உள்ளன. பெரும்பாலான கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நீர்வரத்து கால்வாய் உள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
கண்மாய்களில் உள்ள மடைகள், வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளனவா, மடைகள் எளிதில் திறக்கும்படி உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் திருப்புவனம் வட்டாரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நீர்வளத் துறை உதவி பொறியாளர் வினோத்குமார் ஆய்வு செய்தார். அவருடன் விவசாயிகள் கணநாதன், ஈஸ்வரன்,ராஜாமணி ஆகியோரும் ஆய்வு செய்தனர்.


