ADDED : அக் 15, 2025 12:23 AM
சிவகங்கை; சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலைக்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய தைனேஸ் தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர்,பல்வேறு சங்கங்களின் மாவட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அறிவிக்கக் கோரி அக்.16 கோரிக்கை அட்டை அணிந்து மாலை நேர வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


