Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

ADDED : டிச 03, 2025 06:06 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திருமலை மலைமீதுள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலின் உப கோயிலான அடிவாரத்தில் உள்ள கடம்பவன அய்யனார் கோயில் புனரமைக்கப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த கிராமத்தினர் திட்டமிட்டனர். இக்கோயிலில் டிச., 6 ம் தேதி காலை 10:35 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, இரவு 7:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணா ஹூதியுடன் துவங்குகிறது.

டிச., 7ம் தேதி காலை 6:30 மணிக்கு கோபூஜை, வேதபாராயணம், நாடி சந்தன பூஜை செய்து, அன்று காலை 9:45 மணி முதல் 10:45 மணிக்குள் கடம்பவன அய்யனார் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.

தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் கணேச குருக்கள், சேதுநகர் மக்கள் கும்பாபிேஷக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us