ADDED : பிப் 05, 2024 11:47 PM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே இணைப்புச் சாலை சேதமடைந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் எஸ்.புதுார், பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து அங்குள்ள மின்வாரிய அலுவலகம் செல்லும் 2 கி.மீ., சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இச்சாலை சேதமடைந்து டூவீலர் கூட செல்ல முடியாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இச்சாலையை பராமரிக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மின்வாரிய அலுவலகத்திலிருந்து பூசாரிபட்டி இணைப்புச் சாலை வரை உள்ள பகுதியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


