ADDED : மே 17, 2025 01:06 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர்அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
கார்த்தி எம்.பி., தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆனந்தி, காரைக்குடி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும்அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.