/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரியக்குடி ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி அரியக்குடி ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
அரியக்குடி ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
அரியக்குடி ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
அரியக்குடி ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 25, 2025 05:03 AM

காரைக்குடி, : அரியக்குடி ரயில்வே கேட் ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
தேவகோட்டை ரஸ்தாவிலிருந்து அரியக்குடி செல்லும் ரோடானது கண்டனுார், மாத்துார், இலுப்பக்குடி, புதுவயல் செல்லும் முக்கியச்சாலையாக உள்ளது. தேவகோட்டை, செஞ்சை, ரஸ்தா, மானகிரி உட்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். ரயில்வே கேட் அமைந்துள்ள இந்த ரோட்டின் இருபுறமும் முற்றிலும் சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் ரோட்டை சீரமைக்கவில்லை.