ADDED : அக் 01, 2025 10:09 AM
சிவகங்கை காளையார்கோவில் அருகே உள்ள முத்துார் கிராமத்தில் சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமை வகித்தார்.
தாளாளர் அந்துவான் ரோஸ்லின்மேரி, சுபா முன்னிலை வகித்தனர். மாணவன் தருண் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.மாணவன் ஹரிஹரன் நன்றி கூறினார்.


