ADDED : செப் 27, 2025 04:16 AM
சிவகங்கை: காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார்.
பசுமைப்படை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் மத்தேயு, ஆரோக்கியமேரி, ரோஜா, வெள்ளைச்சாமி, ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உதயகுமார் ஏற்பாட்டை செய்தார். சாரண இயக்க ஆசிரியர் நாகராஜன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.


