/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மேலப்பிடாவூர் கிராமத்தில் குவாரி அமைக்க எதிர்ப்புமேலப்பிடாவூர் கிராமத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு
மேலப்பிடாவூர் கிராமத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு
மேலப்பிடாவூர் கிராமத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு
மேலப்பிடாவூர் கிராமத்தில் குவாரி அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2024 06:36 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தில் மறவன் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதையில் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடாவூர் மறவன் கண்மாய்க்கு நீர் வரத்து பகுதியில் செம்மண் குவாரி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை சிலர் செய்து வருகின்றனர்.
மேலப்பிடாவூர் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் முற்றிலும் நெல் விவசாயம் மற்றும் கால்நடைகள் மேய்க்கும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் வருடம் தோறும் பெய்யும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியாக கண்மாய்க்கு மழை நீர் வரத்து பகுதியில் செம்மண் குவாரி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மறவன் கண்மாய்க்கு வரும் மழை நீர் முற்றிலும் தடுக்கப்பட்டு விவசாயமே அழிந்து போகும் நிலை உள்ளதாகவும், வரத்து கால்வாய் மூலம் கண்மாய்க்கு வர வேண்டிய மழைநீர் முற்றிலும் குவாரியில் தோண்டப்படும் பள்ளங்களில் தேங்கி கண்மாய்க்கு வரவேண்டிய நீர் குறைந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலப்பிடாவூர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.