Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 7.62 லட்சம் உறுப்பினர்களில் 5.77 லட்சம் பேர் ரேகை பதிவு

7.62 லட்சம் உறுப்பினர்களில் 5.77 லட்சம் பேர் ரேகை பதிவு

7.62 லட்சம் உறுப்பினர்களில் 5.77 லட்சம் பேர் ரேகை பதிவு

7.62 லட்சம் உறுப்பினர்களில் 5.77 லட்சம் பேர் ரேகை பதிவு

ADDED : மார் 19, 2025 06:53 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் அரிசி பெறும் கார்டுதாரர்களில் உள்ள 7.62 லட்சம் உறுப்பினர்களில், 5.77 லட்சம் பேர் மட்டுமே விரல் ரேகை பதிவு செய்துள்ளனர். இன்னும் 1.85 லட்சம் பேரிடம் ரேகையை பதிவு செய்ய கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.,) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) திட்ட கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் தலா 20 மற்றும் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.

இந்த கார்டுதாரர்கள் தொடர்ந்து இலவச அரிசி பெற, கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த ரேஷன் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் முன்னுரிமை கார்டுகள் (பி.எச்.எச்.,) 1 லட்சத்து 97 ஆயிரத்து 710 ல் 5 லட்சத்து 99 ஆயிரத்து 594 உறுப்பினர்களும், ஏ.ஏ.ஓய்., திட்டத்தில் 46,339 ரேஷன் கார்டுகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 149 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கண்டிப்பாக அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக ரேஷன் கடைகள் தோறும் விற்பனையாளர்கள் உரிய கருவிகளுடன் சிறப்பு முகாம் நடத்தி, விரல் ரேகைகளை பதிவு செய்து வருகின்றனர். மார்ச் 17 வரை பி.எச்.எச்., கார்டுகளில் உள்ள 4 லட்சத்து 53 ஆயிரத்து 179 பேரும், ஏ.ஏ.ஓய்., கார்டுகளில் உள்ள 1 லட்சத்து 24 ஆயிரத்து 265 பேரும் என 5 லட்சத்து 77 ஆயிரத்து 444 பேர் மட்டுமே விரல் ரேகை பதிவு செய்துள்ளனர்.

இன்னும் ஏ.ஏ.ஒய்., கார்டுகளை சேர்ந்த 38 ஆயிரத்து 884 உறுப்பினர்கள், பி.எச்.எச்., கார்டுகளை சேர்ந்த 1 லட்சத்து 46 ஆயிரத்து 415 பேர் என 1 லட்சத்து 85 ஆயிரத்து 299 பேர் இன்னும் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us