/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீசாரை வாளை காட்டி மிரட்டிய நபர்கள்போலீசாரை வாளை காட்டி மிரட்டிய நபர்கள்
போலீசாரை வாளை காட்டி மிரட்டிய நபர்கள்
போலீசாரை வாளை காட்டி மிரட்டிய நபர்கள்
போலீசாரை வாளை காட்டி மிரட்டிய நபர்கள்
ADDED : பிப் 11, 2024 01:32 AM
சிவகங்கை:சிவகங்கை அருகே வாணியங்குடியில் ரோந்து சென்ற போலீசாரை வாளை காட்டி மிரட்டிய நபர்கள் தப்பிச்சென்றனர்.
சிவகங்கை வாணியங்குடி சாலையில் நேற்றுமுன்தினம் இரவு சந்தேகம்படும்படி நின்ற 2 பேரை ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். போலீசாரை வாளை காட்டி மிரட்டி அவர்கள் தப்பினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் நேற்று பாகனேரியில் புதுவளவு என்ற இடத்தில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் படிக்கட்டு மற்றும் அங்கு நிறுத்தியிருந்த டூவீலர் மீது மோதியுள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்தவர்களை அந்த கும்பல் வாளை காட்டி மிரட்டியுள்ளது.
கிராம மக்கள் கூடியதால், கார், வாள், அலைபேசியை விட்டுவிட்டு கும்பல் தப்பி சென்றது. சொக்கநாதபுரம் சாலை வழியாக ஓடிய அந்த கும்பல், அங்கிருந்த 2 பேரை மிரட்டி டூவீலரை பறித்து கொண்டு சென்றது. மதகுபட்டி போலீசார் கார், வாள், அலைபேசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.