Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் மாயமாகும் பெண்கள் போலீசாருக்கு அலைச்சல்

திருப்புவனத்தில் மாயமாகும் பெண்கள் போலீசாருக்கு அலைச்சல்

திருப்புவனத்தில் மாயமாகும் பெண்கள் போலீசாருக்கு அலைச்சல்

திருப்புவனத்தில் மாயமாகும் பெண்கள் போலீசாருக்கு அலைச்சல்

ADDED : செப் 25, 2025 05:05 AM


Google News
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் உரிய வழிகாட்டல், ஆலோசனை இல்லாததால் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மாயமாகி வருவது போலீசாருக்கு அலைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 154 கிராமங்கள் உள்ளன. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 129 பேர் உள்ளனர். இதில் 67 ஆயிரத்து 149 பேர் பெண்கள், பெரும்பாலான பெண்கள் கார்மென்ட்ஸ், மதுரையில் உள்ள மொத்த வியாபார கடைகளில் கூலி வேலை, டெய்லரிங், பேக்கிங் செக்சன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தினசரி காலையில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு சென்று மாலையில் திரும்புகின்றனர்.

பகல் முழுவதும் வேலை, இரவில் வீட்டில் போதிய ஆதரவு இன்றி கணவர், பெற்றோருடன் தகராறால் விரக்தியடைகின்றனர். குடும்ப தகராறு குறித்து புகார் செய்ய திருப்புவனத்தில் மகளிர் காவல் நிலையம் இல்லை.

30 கி.மீ.,துாரமுள்ள மானாமதுரைக்கு சென்று புகார் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகி விடுகின்றனர். பெண்களை காணாமல் குடும்பத்தினர் தவிப்பதுடன் போலீசில் புகார் செய்கின்றனர். கடந்த இரு மாதங்களில் நான்கு பெண்கள், 4 குழந்தைகள் மாயமாகினர்.

திருப்புவனம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார் பெண்கள் மாயமானது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி அவர்களது அலைபேசி மற்றும் சி.சி.டி.வி., பதிவு உள்ளிட்டவற்றை கண்காணித்து அனைவரையும் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் பெண்கள் தொடர்பான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காண திருப்புவனம் நகரில் உடனடியாக மகளிர் காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us