/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்
போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்
போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்
போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்
ADDED : பிப் 12, 2024 04:59 AM

சிவகங்கை: சிவகங்கை டவுன் போலீஸ் குடியிருப்பில் கூரைகளில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
சிவகங்கை டவுன் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் தற்போது 40 போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்த குடியிருப்புகள் கட்டி 10 ஆண்டிற்கு மேலாகிறது. இக்கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி கட்டட கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் குடியிருக்க முடியாமல் போலீசார் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.