Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ADDED : அக் 05, 2025 05:12 AM


Google News
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00மணிக்கு மூலவருக்கும்,நந்தீஸ்வரருக்கும் சிறப்பு பூஜை,அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாதர்-அம் பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள தீபாராதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us