Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம்

சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம்

சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம்

சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம்

ADDED : அக் 12, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. இங்குள்ள, அருவியூர் தெற்குவளவு நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட லட்சுமண், அனுமன், சீதா சமேத ராமர் கோயிலில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி காலை 10:00 மணிக்கு பஜனை பாடப்பட்டது. 11:00 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் லட்சுமணன், அனுமன், சீதா சமேத ராமர் காட்சியளித்தனர். ஏற்பாடுகளை அருவியூர் தெற்கு வளவு நகரத்தார் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us