/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு குழந்தைகளை அனுப்ப மறுப்பு தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு குழந்தைகளை அனுப்ப மறுப்பு
தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு குழந்தைகளை அனுப்ப மறுப்பு
தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு குழந்தைகளை அனுப்ப மறுப்பு
தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு குழந்தைகளை அனுப்ப மறுப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:20 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே இளங்குடி ஊராட்சியில் தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், நாடக மேடையில் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தினர்.
இளங்குடி ஊராட்சிக்குட்பட்ட கருகுடியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஜெயமேரி தலைமையாசிரியை ஆக பணியாற்றி வந்தார். இவரை, இடமாற்றம் செய்ய கோரியதால் ஜெயமேரி கடந்த ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவ்வாண்டு பள்ளி தொடங்கிய நிலையில், ஜெயமேரி மீண்டும் இதே பள்ளிக்கு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. கடந்த 2 நாட்களாக பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பள்ளிக்கு அனுப்பாமல் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் வைத்து பாடம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: தலைமையாசிரியை முறையாக பாடம் நடத்துவதில்லை. ஆண்டு விழாவிற்கு கூட வருவதில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறினர். பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக தலைமை ஆசிரியை சாக்கோட்டை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியையும், ஒரு ஆசிரியரும் இருந்தனர். 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளதால் ஒரு ஆசிரியர் மட்டுமே போதுமானது.