/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி
வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி
வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி
வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி
ADDED : செப் 19, 2025 02:06 AM
சிவகங்கை: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் சேகர் 47. இவரது மூத்த மகன் சதீஸ்குமார் ஐ.டி.ஐ., படித்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தார்.
சேகர் தனது மருமகன் சமயத்துரை மூலம் அறிமுகமான மங்காம்பட்டி ரகுபதிராஜன் 49 மூலமாக சதீஸ்குமாரை நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப முயற்சித்தார். இதற்காக ரகுபதிராஜா ஜிபே எண்ணிற்கு சேகரின் மகன் சதீஸ்குமார் 2022 பிப்.26ல் ரூ.47 ஆயிரமும், மார்ச் 2ல் 50 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.
உறவினர் தியாகு ஜிபே எண்ணிலிருந்து ரகுபதிராஜன் ஜிபே எண்ணிற்கு ரூ.1 லட்சம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற ரகுபதிராஜன் வெளிநாடு அனுப்பாமலும் பணத்தை திரும்ப தராமலும் சேகரை ஏமாற்றியதாகவும் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சேகர் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.