/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அவுட்சோர்சிங் முறையில் மகளிர் திட்டஇயக்குனர் நியமனத்திற்கு எதிர்ப்பு அக்.23 ல் போராட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் முடிவு அவுட்சோர்சிங் முறையில் மகளிர் திட்டஇயக்குனர் நியமனத்திற்கு எதிர்ப்பு அக்.23 ல் போராட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் முடிவு
அவுட்சோர்சிங் முறையில் மகளிர் திட்டஇயக்குனர் நியமனத்திற்கு எதிர்ப்பு அக்.23 ல் போராட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் முடிவு
அவுட்சோர்சிங் முறையில் மகளிர் திட்டஇயக்குனர் நியமனத்திற்கு எதிர்ப்பு அக்.23 ல் போராட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் முடிவு
அவுட்சோர்சிங் முறையில் மகளிர் திட்டஇயக்குனர் நியமனத்திற்கு எதிர்ப்பு அக்.23 ல் போராட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் முடிவு
ADDED : செப் 20, 2025 03:29 AM
சிவகங்கை:மகளிர் திட்ட இயக்குனர், உதவி திட்ட அலுவலர் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணை 188 யை ரத்து செய்யக்கோரி மாநில அளவில் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்கள் மூலம் மகளிர் குழுக்கள் அமைத்து, அவர்களுக்கான கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டந்தோறும் மகளிர் திட்ட இயக்குனர், உதவி திட்ட அலுவலர் போன்ற பணியிடங்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்படும். இதன் மூலம் உதவி இயக்குனர்கள், இணை இயக்குனராகவும், பி.டி.ஓ.,க்கள் உதவி இயக்குனர், உதவி திட்ட அலுவலராகவும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படுவர்.
இந்நிலையில் அரசாணை 188 ன் படி மகளிர் திட்ட இயக்குனர், உதவி திட்ட அலுவலர் போன்ற பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இம்முடிவுக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் அலுவலர்கள் முடிவுகளை எடுப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள்.
இதனால் மகளிர் குழுக்களை இழுத்து மூடும் முடிவுக்கு அரசு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செப்., 25, அக்., 23 போராட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஜி.பிரபு கூறியதாவது : குரூப் 1 நிலையிலான அதிகாரிகள் பணிக்கு பதவி உயர்வு மூலம் நியமிக்காமல் அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். முதற்கட்டமாக அவுட்சோர்சிங் மூலம் உதவி திட்ட அலுவலர், அடுத்தகட்டமாக 5 மாவட்டங்களுக்கு திட்ட இயக்குனர்களை நியமித்துள்ளனர். அரசாணை 188 யை ரத்து செய்ய கோரி செப்., 25ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், அக்.,23 ல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அலுவலகம் முன் மாநிலம் தழுவிய அளவிலான முறையீடு செய்யவும் உள்ளோம் என்றார்.