Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

ADDED : மே 28, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது.

கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 175 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 1,159 பாட ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2 வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 61 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 752 பாட ஆசிரியர்களுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு குழுவினைச் சார்ந்த 215 ஆசிரியர்களுக்கும், கிளாட் பயிற்சி வழங்கிய 16 ஆசிரியர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை மாவட்ட அலுவலர்களான முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், அலுவலர்கள் 30 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 408 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்ற 8 மாணவர்களுக்கும், பிளஸ் 2 வில் 3 மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் 11 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையினை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, புனித மைக்கேல் கல்வி குழுமத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்.விஜய சரவணக்குமார். ஜோதிலெட்சுமி, செந்தில்குமரன், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us