ADDED : அக் 02, 2025 11:36 PM
சிவகங்கை ; சிவகங்கையில் காதி கிராப்ட் மையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் விற்பனையை துவக்கி வைத்தார். மாவட்ட அளவில் கடந்த ஆண்டு ரூ.90 லட்சத்தில் கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரூ.1.80 கோடிக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். 30 சதவீத தள்ளுபடியில் ஜவுளிகள் விற்பனை செய்யப்படும். சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, காதி கிராப்ட் அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர்.


