/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார் அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்
அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்
அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்
அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்
ADDED : டிச 04, 2025 01:05 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்கள், அலுவலக உதவியாளருக்கு ஒத்துழைப்பு தராமல், தொடர்ந்து பணி செய்யுமாறு தாசில்தார் முருகன் தொந்தரவு செய்வதாக ஊழியர்கள் புகார் கூறினர்.
இதன் காரணமாகவே தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் கத்தியால் கையில் குத்தி சிகிச்சை பெற்றதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
தாலுகா அலுவலக பணியாளர்கள் கலெக்டர் பொற்கொடிைய சந்தித்து தாசில்தார் மீது புகார் தெரிவித்தனர். இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்கே சென்று துணை தாசில்தார், ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்கள், அலுவலர்களிடம் அவர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போதும் அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் முருகனை விடுப்பில் செல்ல கலெக்டர் உத்தரவிட்டார்.
மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூடுதல் பொறுப்பாக இளையான்குடியை கவனித்து வருகிறார். மானாமதுரை சட்டசபை தொகுதியில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் தாசில்தார்கள் உதவி தேர்தல் ந டத்தும் அலுவலராக இருப்பதால், புதிதாக இளையான்குடியில் தாசில்தாரை நியமிக்க வேண்டும். இதனால் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் சுமை குறையும். இதற்காக சிலரது பெயர்களை தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு கலெக்டர் அனுப்பியுள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.


